இளைஞர்களை கொடூரமான தாக்கியதாக பொலிஸார்... பிரதேசவாசிகளின் செயலால் பதற்றம்!
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கியதாகக் குற்றம்சாட்டி பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் (24-10-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 20-10-2024 ஆம் திகதி, போபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நுழைந்து தங்க நகையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
இரண்டு இளைஞர்களும் சீதுவையில் உள்ள வேலைத்தளத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
கைதானவர்கள் பமுனுகம மற்றும் செத்தபாடு பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தங்க நகைகள் திருட்டில் ஈடுபடாத இந்த இரு இளைஞர்களையும் பொலிஸார் கொடூரமாக தாக்கியதாக பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பின்னர், துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டின், தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் ராகம போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் நீதி பெற்றுத்தரப்படும் என துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்ததையடுத்து, குழுவினர் கலைந்து சென்றனர்.