இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நபர்; நேர்ந்த கதி!
தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியிலிருந்து தவறிவிழுந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சமபவத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படாமையால் இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு தப்பிக்க முயன்ற போது அவ்விடத்தில் உள்ள பொது மக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவசர அம்புலன்ஸ் வண்டியினூடாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
