யாழில் பேருந்து சாரதி மூக்கை வெட்டிய நபர்
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தை மறித்த நபர் ஒருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்வேலி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் வீதியில் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை கடத்திச் சென்ற நபர் ஒருவர், சாரதியின் மூக்கைக் கத்தியால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்