விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை காலால் உதைத்த நபர்!
கர்நாடகாவில் உள்ள பெங்களூர் விமான நிலையம் ஒன்றில் தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை (Vijay Sethupathi) பாதுகாவலர்கள் முன்பாகவே எட்டி உதைத்த நபரின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் சினிமா மத்திரமின்றி தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட தொகுப்பாளராகவும் பங்கேற்று வருகிறார்.
Last Night Actor #VijaySethupathi PA attacked in Bengaluru Airport. The Pa reportedly was clearing the walk way for @VijaySethuOffl. When PA pushed a person. In rage, the person kicked him from the back.
— MilagRRRo Movies (@MilagroMovies) November 3, 2021
No case registered. pic.twitter.com/tq7zQ1sDWM
அண்மையில் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருது பெற்றார். தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவருகின்றனர். இந்த வகையில் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கர்நாடகாவில் உள்ள பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றபோது அங்கே அவரை சிலர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதியும் அவர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கேயே இருந்த பாதுகாப்பு காவலர்கள் வெளியே விஜய் சேதுபதியை அங்கிருந்து அழைத்துச் சென்றனர் அப்போது பின்னாலிருந்து வேகமாக ஓடி வந்த நபர் ஒருவர் விஜய் சேதுபதியை எகிரி காலால் உதைத்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.