"வந்தார்,எலிமினேட் ஆனார்,ரிப்பீட்"...மீண்டும் வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு இந்த வாரம் மீண்டும் கமல் ஹாசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நேற்றைய நிகழ்ச்சியில் ராஜு முதலாவதாக காப்பாற்றப்பட்டார்.
அதைத் தொடர்ந்து வெளியான இன்றைய ப்ரோமோ வில் கமல்ஹாசன் கெத்தாக சோபாவில் அமர்ந்து உள்ளார். அதில் அவர், நேற்று முதலில் காப்பாற்றப்பட்டது ராஜு. இன்று முதலில் காப்பாற்றப்பட போவது யார். உங்களால் காப்பாற்றப்பட போகிறவர்களின் வரிசை என்ன, வெளியேற போவது யார் என்று இன்று இரவு காண்போம் என்று சஸ்பென்சாக கூறுகிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் தான் நிச்சயம் வெளியேறுவார் என்று மக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்டுள்ளார்.