தேவையில்லாத ஆணிகளை புடுங்க வேண்டாம்; அருச்சுனாவின் வாயை மூடிய எம்.பி!
உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள் என்றும், தேவையில்லாத ஆணிகளை புடுங்க வேண்டாம் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் ,அர்ச்சுனா எம்.பியிடம் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம்
அதோடு எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கேட்டுக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம், தேவையான ஆணிகளை புடுங்குமாறு கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அதோடு தேவையான ஆணிகளை புடுங்குங்கள், தேவையில்லாத ஆணிகளை புடுங்க வேண்டாம் என்றும் அர்ச்சுனா எம்.பியிடம் , நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் கேட்டுக்கொண்டார்.