உலகில் அதிகளவு திருடப்படும் உணவுப் பொருள் என்ன தெரியுமா? ஆச்சர்யத்தை ஏற்படுத்திய தகவல்
உலகில் அதிகளவு திருடப்படும் உணவுப் பொருள் 'சீஸ்' (Cheese) என ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்மை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில்லறை விற்பனை ஆராய்ச்சி மையத்தின் (Centre for Retail Research) தரவுகளின்படி, உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சீஸில் சுமார் 4 சதவீதம் திருடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

கறுப்புச் சந்தையில் எளிதாக விற்பனை
இதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சீஸ் விலை உயர்ந்தது என்பதால், இதனைத் திருடி கறுப்புச் சந்தையில் எளிதாக விற்பனை செய்ய முடிகிறது.
பல சீஸ் வகைகள் அளவில் சிறியதாகவும் எளிதில் மறைத்து எடுத்துச் செல்லக்கூடிய வகையிலும் இருப்பதால், திருடர்களுக்கு இது இலகுவாக அமைகிறது.
உணவகங்கள் மற்றும் சிறு கடைகளில் சீஸிற்கான தேவை அதிகமாக இருப்பதால், திருடப்படும் பொருட்கள் அங்கு மலிவு விலையில் விற்கப்படுகின்றன.
சீஸிற்கு அடுத்தபடியாக இறைச்சி வகைகள், சொக்லேட்கள் மற்றும் மதுபானங்கள் ஆகியன அதிகளவு திருடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.