டைட்டானிக் கப்பலை காணச்சென்ற கோடீஸ்வர குடும்பத்தினர் உயிரிழப்பு! வெளியான தகவல்
அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடலில் திடீரென மாயமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல் மாயமான நிலையில், அதனை தேடும்பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்த அதில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐவர் உயிரிழப்பு
இதில், பிரபல பிரிட்டன் தொழிலதிபர் இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் டைட்டானிக் நிபுணர் ஒருவரும், ஓஷன்கேட் நிறுவன சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகிய 5 பேர் சென்றிருந்தனர்.
இதனை கடந்த 4 நாள்களாக 22 அடி நீள நீர்மூழ்கியை பல நாடுகளின் ஆய்வாளர்களும் தேடி வந்தது. இந்த நிலையில், காணாமல் போயிருந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிறிய பாகங்கள் உடைந்த நிலையில் கனடா கடற்படையால் மீட்கப்பட்டன.
இதனையடுத்து நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துவிட்டதாக ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அதில் ஆக்சிஜன் கொள்ளிருப்பு 96 மணிநேரமே இருந்ததாக முன்னரே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயிரிழந்த செல்வந்தரின் குடும்பத்தினர் மிகவும் உருக்கமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
குடும்பத்தினர் உருக்கமான அறிக்கை
சசாடா தாவுத் மற்றும் சுலைமன் தாவுத்தின் குடும்பத்தினர் அறிக்கையொன்றில் எங்கள் அன்பான மகன்கள் ஓசன்கேட்டின் நீர்மூழ்கியில் இருந்தனர் அது நீருக்கடியில் இறந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரமான தருணத்தில் பிரிந்த ஆன்மாக்களையும் எங்கள் குடும்பத்தையும் உங்கள் நினைவுகளி;ல் பிரார்த்தனைகளில் தொடர்ந்தும் வைத்திருங்கள் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் உண்மையிலேயே நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் அவர்களின் அயராத முயற்சி இந்த தருணத்தில் எங்களிற்கு பெரும்பலமாக காணப்பட்டது என உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.