பிரியந்த கொல்லப்பட்ட பின் அவரது தாயாரிற்கு தெரிவிக்க முடியாமல் மறைக்கப் படும் முக்கிய தகவல்
கொலையின் மனிதாபிமானமற்ற தன்மையை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றோம் இ;வ்வாறான வன்முறை தாக்குதல்களில் ஈடுபடாதீர்கள் - மனிதாபிமானமற்ற விதத்தில் நடந்துகொள்ளாதீர்கள் என்பதை நான் இந்த குற்றத்தை இழைத்தவர்களிற்கு தெரிவிக்கவேண்டும் பாக்கிஸ்தானில் மதநிந்தனைக்காக வன்முறைகும்பலால் ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட இலங்கை முகாமையாளரின் குடும்பத்தினர் இறுதி நிகழ்வுகளிற்கு தயாரகும் அதேவேளை கொலையின் மனிதாபிமானமற்ற தன்மையை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதாக தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இந்த படுகொலையுடன் தொடர்புடைய ஏழு முக்கிய நபர்களைகைதுசெய்துள்ளதாக பாக்கிஸ்தான் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாக்கிஸ்தானின் கிழக்கு நகரான சியால்கோட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பொதுமுகாமையாளராக பணிபுரிந்த பிரியந்த குமாரவின் உடல் இன்று இலங்கை வந்துசேரவுள்ளது என கொல்லப்பட்டவரின் மூத்த சகோதாரர் கமால் குமார அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.
இவ்வாறான வன்முறை தாக்குதல்களில் ஈடுபடாதீர்கள் -மனிதாபிமானமற்ற விதத்தில் நடந்துகொள்ளாதீர்கள் என்பதை நான் இந்த குற்றத்தை இழைத்தவர்களிற்கு தெரிவிக்கவேண்டும் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.
நாங்கள் மனிதர்கள் இல்லையா நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர்மதிக்கவேண்டும் மதங்களை மதிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை சியால்கோட்டில் அவர் முகாமையாளராக பணிபுரிந்த தொழிற்சாலையில் மதநிந்தனையில் ஈடுபட்டார் என குமார குற்றம்சாட்டப்பட்டார்.
கும்பலொன்றினால் அவர் தடிகளால் கைகளால் கால்களால் தாக்கப்பட்டார் என தெரிவித்த பொலிஸார் அதன் பின்னர் தொழிற்சாலைக்கு வெளியே உள்ள வீதிக்கு இழுத்துவந்து தீயிட்டு கொழுத்தினார்கள் எனவும் தெரிவித்தனர். முகமதுநபிக்கு ஆதரவான கோசங்களை பலர் எழுப்புவதையும் எரிந்துகொண்டிருக்கின்ற உடலுடன் அவர்கள் செல்பி எடுத்துக்கொள்வதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.
மதநிந்தனை என்பது பாக்கிஸ்தானில் உணர்வுபூர்வமான விடயம்,அங்கு முகமது நபியை அவமதிப்பது உட்பட சில குற்றங்களிற்கு மரணதண்டனை விதிக்கலாம்,அதிகரித்துவரும் மதநிந்தனை குற்றச்சாட்டுகள் நீதிவிசாரணைக்கு புறம்பான படுகொலைகள் மற்றும் கும்பல்களினால் தாக்கப்படுதல் ஆகியவற்றிற்கு வழிவகுத்துள்ளன.
1990ம் ஆண்டின் பின்னர்இதன் காரணமாக 80க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதை அல்ஜசீராவின் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
கொல்லப்பட்டவருக்கு மனைவியும் 14 மற்றும் 9 வயது பிள்ளைகளும் உள்ளனர்,குமாரவின் குடும்பத்தினர் இலங்கை அரசாங்கம் பாக்கிஸ்தான் அரசாங்கத்திடமிருந்துஅல்லது குறிப்பிட்ட தொழிற்சாலையிடமிருந்து உடனடியாக நிதிஉதவியை கோரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தீவிரநடவடிக்கைகளை எடுப்பார் என நாங்கள் நம்புகின்றோம் என தெரிவித்த கமால் குமார மனைவியும் பிள்ளைகளும் தனித்துபோயுள்ளனர் என்பதால் - அவர்களிற்கு கல்விவழங்கவேண்டியுள்ளதால் அவர்களிற்கு உதவுமாறு பாக்கிஸ்தான் அரசாங்கத்தை கேட்குமாறு இலங்கை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என குறிப்பிட்டார்.
ஆறு பேர்கொண்ட குடும்பத்தில் இளையவர் பிரியங்க குமார,அவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற விபரத்தை அவரது தாயாரிடம் இன்னமும் தெரிவிக்கவில்லை என கமால் குமார தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் தொலைக்காட்சிகளை அவர் பார்ப்பதை தவிர்க்கும் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளோம் பிரியந்த தாக்கப்படும் காட்சிகளை தாயார் பார்க்கமாலிருப்பதை உறுதிப்படுத்த முயல்கின்றோம் என கமால் குமார தெரிவித்தார்.
எனது தாய்க்கு 80 வயது அவர் உடல்நிலைபாதிப்புக்குள்ளானவர் என்ன நடந்தது என எங்களால் அவருக்கு இன்னமும் தெரிவிக்க முடியவில்லை அவர் தொடர்ந்தும்அழுதுகொண்டிருக்கின்றார் எனவும் கமால் தெரிவித்தார்.

