சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பிய நபர்; பயணித்த பேருந்தில் பறிபோன உயிர்
சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பயணித்த பேருந்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் - டிக்கோயா, படல்கல மேற்பிரிவைச் சேர்ந்த ஆறுமுகன் தியாகேஸ்வரன் எனும் முச்சக்கரவண்டி சாரதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாதம் ஒருமுறை வைத்தியசாலைக்கு
தொற்று அல்லாத நோய்க்கு மருந்து எடுப்பதற்காக, மாதம் ஒருமுறை கண்டி போதனா வைத்தியசாலைக்கு தொற்று அல்லாத நோய்க்கு மருந்து எடுப்பதற்காக, மாதம் ஒருமுறை சென்று வருபவர் என்றும் அறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த (19.10.2023) ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறி, (20.10.2023) ஆம் திகதி காலை கிளினிக்கிற்குச் சென்று, தனியார் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். ஹட்டனில் இருந்து போடைஸ் நோக்கிச் சென்ற பஸ்ஸில் பயணித்த போது அவர் உயிரிழந்ததாக உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்காதது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பயணியை சோதனையிட்டதில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸாரின் பணிப்புரையின் பிரகாரம் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் அதே பஸ்ஸில் டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.