எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை எடுத்த முக்கிய தீர்மானம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதத்தில் இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலரை கடனுதவியாக பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்ட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலியக் கூட்டுதாபனம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.
இதனால், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலரை தேடிக்கொள்வதற்கும், பெற்றோலிய கூட்டுதாபனம் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது. டொலர் கையிருப்பில் இல்லாத காரணத்தினாலே கடந்த வாரம் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்ட்டது. மேலும் தற்போது எரிபொருளின் இறக்குமதிக்காக 350 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலரை அவசர கடனாக பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.