பிரித்தானிய பிரதமரானார் இந்திய வம்சாவழி ரிஷி சுனக்; நியமனம் வழங்கிய மன்னர்!
பிரித்தானியாவின் 57ஆவது பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 42 வயதான ரிஷி சுனக் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் .
பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் அவருக்கு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இளம் பிரதமர் என்ற பெருமை
இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்(Rishi Sunak) (வயது 42) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார்.
இங்கிலாந்தின் 57-வது பிரதமராக பதவியேற்க உள்ள சுனக் அரசர் 3-ம் சார்லஸ்(Charles III ) தலைமையில் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் தீபாவளி அன்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு வரலாற்று தருணம் என இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் புகழ்ந்து உள்ளனர்.