வேண்டுமென்றே மக்களை ஏமாற்றும் அநுர தரப்பு யாழ். எம்.பி
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இலங்கைப் பாராளுமன்றத்தில் NPP சார்பில் 46 இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனின் கருத்து தொடர்பில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளரின் கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் கடந்த 1980ஆம் ஆண்டு பிறந்தவர். அவருக்கே தற்போது 45 வயது ஆகின்றது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிந்துகொண்டே இப்படியான பிழையான தகவல்களை பரப்புவதற்கு, வாக்களித்த யாழ். கிளிநொச்சி மாவட்ட மக்கள் முட்டாள்கள் என்ற எண்ணம் தான் காரணமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து குறித்த சுயாதீன ஊடகவியலாளர் இட்டுள்ள முகப்புத்தக பதிவில்,
தேசிய மக்கள் சக்தி யாழ் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் Rajeevan Jeyachandramoorthy, இலங்கைப் பாராளுமன்றத்தில் NPP சார்பில் 46 உறுப்பினர்கள் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
அவர்கள் பகிர்ந்துள்ள 46 பேரின் விபரங்களையும் உறுதிப்படுத்தும் அளவிற்கு போதுமான நேரம் இல்லை. ஆனால் ரஜீவனின் பெயர் பட்டியலில் உள்ளது.
ரஜீவன் பிறந்தது 1980ம் ஆண்டு அப்படிப்பார்த்தால் அவருக்கு 45 வயது. என்னுடைய கேள்வி நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களில், குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இளையவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது விதி.
குறித்த பிரிவில் ரஜீவனைப் போலவே 1980ம் ஆண்டு பிறந்தவர்களைப் பட்டியல்ப்படுத்தி நியமனபத்திரம் தாக்கல் செய்தால் குறித்த வேட்புமனுக்களை தேர்தல்கள் திணைக்களம் ஏற்றுக்கொள்ளுமா?
அரசியல், தேர்தல் குறித்த எந்த ஈடுபாடும் இல்லாத ஒரு சாமானியன் சொல்லுவான் அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிந்துகொண்டே இப்படியான பிழையான தகவல்களை பரப்புவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.
01. வாக்களித்த யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் முட்டாள்கள் என்ற எண்ணம்.
02. முதலாவது சொன்னது தான்.