வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் 9 மாதங்களுக்கு முன் காணமால் போன ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரற்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியிலே இவ் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசித்து வந்து காணமல் போன ஒருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஜிந்தக்க ராஜபக்க்ஷ மாயம்
அதே பகுதியில் வசித்து வந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ஷ என்பர் கடந்த 9 மாதங்களுக்கு முன் காணமால் போயுள்ளார்.
இந்நிலையில் தற்போது மனித எச்சங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இது காணமால் போனவரின் உடல் அங்கங்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.