ஆப்கானிஸ்தான் அணியை வென்ற இலங்கை அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டி இன்று நடைபெற்றது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபடியான ஓட்டங்களாக, மொஹமட் நபி (Mohammad Nabi ) 60 ஓட்டங்களையும், ரிஷாட் கான் (Rashid Khan) மற்றும் இப்ராஹிம் சத்ரான்(Ibrahim Zadran) 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தநிலையில், 170 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்படி குறித்த போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.