யாழ்.மக்களுக்கு மரண பயத்தை காட்டிய இ.போ.ச பேருந்து!
யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை வீதி ஊடாக இருபாலை பகுதியில் இன்றைய தினம் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று அதி வேகத்தில் பயணித்த சம்பவம் வீதியில் சென்றோரை மரணபயத்துக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் குறித்த பேருந்தில் பயணிகளை மிருகங்கள் போல் ஏற்றிச்சென்றுள்ளனர்.
இளைஞர்கள் மிதிபடிகளில் தொங்கியபடி ஆபாயகரமாக பயணித்துள்ளனர்.
அதிகமான பயணிகளை ஏற்றியது மட்டுமன்றி அதிவேகமாகவும் குறித்த பேருந்து பயணித்ததாக வீதியில் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பயணித்தால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதை உணர்ந்தும் குறித்த பேருந்து அசுர வேகத்தில் பயணித்துள்ளது.
இதனை அவதானித்த மக்கள் பலர் இவ்வாறு பயணிக்கும் பேருந்துகளில் பயணிக்கக் கூடாது என்று இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து எமக்கு அந்த காணொளியை அனுப்பி வைத்துள்ளனர்