இருளில் மூழ்கிய பிரபல விகாரை!
பெரும் தொகை மின்கட்டணம் செலுத்தப்படாததால் வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல விகாரையில் நேற்று (28) மாலை மின்சாரசபையினரால் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட பிக்குகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம் திம்புலாகல விகாரை வரலாற்றில் மின்சாரம் துண்டிக்கப்படுவது இதுவே முதல் தடவை என அதன் சேனாசன தலைவர் மில்லனே சிரியாலங்கார தெரிவித்துள்ளார்.
ஐந்து இலட்சம் ரூபாவை தாண்டிய மின் கட்டணம்
ஐந்து இலட்சம் ரூபாவை தாண்டிய மின் கட்டணம் காரணமாக விகாரைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுப்பதாக திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிபதி தெரிவித்துள்ளார்.