இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம்
இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது
இலங்கையின் பணவீக்கம் ஜூலையில் 60.8 சதவீதமாக இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அரச புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரவலாகப் பார்க்கப்படும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 230.1 புள்ளிகளிலிருந்து 235.8 புள்ளிகளாக இந்த மாதத்தில் 2.5 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
ஆகஸ்ட் வரையிலான 12 மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை 93.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
இலங்கையின் பணவீக்கம் இரண்டு வருடங்களாக பணம் அச்சடித்தல் மற்றும் நாணயத்தின் வீழ்ச்சியின் பின்னர் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி சந்தை விகிதங்கள் சுமார் 30 சதவீதத்திற்கு செல்ல அனுமதித்துள்ளது, கடன் மற்றும் வெளியேற்றத்தை குறைத்துள்ளது.