முகத்தில் கரும்புள்ளியா? பின்னால் உள்ள உடல்நல எச்சரிக்கை என்ன தெரியுமா?
பொதுவாக சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் அழகு சார்ந்த ஒரு பிரச்சனையாகவே கருதப்படுகின்றன. இந்த கரும்புள்ளிகளானது முகம், கை, தோள்பட்டைகள், முதுகு போன்ற பகுதிகளில் கருப்பு நிற புள்ளிகள் போன்று இருக்கும். இதனால் பலரும் இதை தீங்கற்றவையாக கருதி சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர்.

கரும்புள்ளிகள் பெரும்பாலும் தீங்கற்றவை மற்றும் அவை புற ஊதாக்கதிர்களுடன் தொடர்புடையவை. ஆயினும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், சரும நிறமியில் ஏற்படக்கூடிய மாற்றங்களானது மிகவும் முக்கியமான உள்ளுறுப்பான கல்லீரல் பிரச்சனையின் ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

சிறுநீரக செயலிழப்பு மற்றும் நச்சு தேக்கம்
கல்லீரல் பலவீனமாக இருந்தால், இரத்தத்தில் இருந்து நச்சுக்களை திறம்பட பிரித்தெடுக்க முடியாமல் போகும். இரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது செல்களைச் சேதப்படுத்தி, மெலனோசைட்டுகளைச் செயல்படுத்தி, கரும்புள்ளிகளை வரத் தூண்டுகிறது.
ஹார்மோன் சமநிலையின்மை கல்லீரல் பிரச்சனைகளை உருவாக்கும்
கல்லீரல் தான் ஹார்மோன்களை வளர்சிதை மாற்றம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்போதெல்லாம் கல்லீரல் பாதிக்கப்படுகிறதோ, அப்போது ஹார்மோன் வெளியேற்றம் குறைகிறது. இப்படி ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது, அது மெலனின் உற்பத்திக்கு தேவையான மெலனோசைட்டுகள் எனப்படும் செல்களை அதிகப்படியாகத் தூண்டுகிறது. இந்த சரும நிறத்தைக் கொடுக்கும் மெலனோசைட்டுகள் அதிகப்படியாகத் தூண்டப்படும்போது, அவை சருமம் கருமையாவதற்கும், சீரற்ற திட்டுகளுக்கும் வழிவகுக்கின்றன.