யாழில் சர்வதேச வர்த்தக சந்தையை தொடங்கிவைத்த ஆளுநர்!
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று காலை அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளார்.
“வடக்கின் நுழைவாயில்” என்ற தொனிப்பொருளில் 13வது சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கண்காட்சியை தொடங்கிவைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 3 நாட்கள் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது. மேலும் உள்ளூர் நிறுவனங்கள், தேசிய நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளதுடன், விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெபாஸ்கரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன்,
மேலும் யாழ்.தொழில்துறை மன்ற தலைவர் விக்னேஷ் என பலர் கலந்து கொண்டனர்.