நல்லை ஆதீன முதல்வர் மறைவுக்கு பலரும் இரங்கல்
யாழ்ப்பாணம் நல்லை (திருஞானசம்பந்த) ஆதீனத்தின் முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறைபதமடைந்துள்ளார்.
அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈழத்து இராமேச்சுவரர் என அழைக்கப்படும் புங்குடுதீவு பானாவிடைச்சிவன் தான்தோன்றீச்சுவர திருக்கோவில் சிவ அடியார்கள் , நல்லை ஆதீன முதல்வர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவுகள்,மனித உரிமையை பாதுகாப்பதற்காக சுவாமிகள் செயற்பட்டமை போன்ற பல விடயங்களை எடுத்துகாட்டி அடியார்கள் இரங்கலை வெளிப்படுத்தியுள்ளனர்.
சுவாமிகளின் திருமேனி பிரார்த்தனைக்காக இன்று (02.05.2025) காலை நல்லை ஆதீனத்தில் வைக்கப்பட்டு 2 மணிக்குப் பின்னர் நல்லடக்கத்திற்கான ஆராதனைகள் இடம்பெற்று திருவுடல் செம்மணி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.