11 வயது சிறுவனை கொன்ற வளர்ப்புத் தந்தை!
காத்தான்குடி - நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த 11 வயதான சிறுவனை, வளர்ப்புத் தந்தை கடுமையாக தாக்கியதில் உயிர்ழந்த சம்பவம் திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுவனின் வளர்ப்பு தந்தை காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுவனின் தாய் தனது கணவரை விவாகரத்து செய்த பின்னர் மாத்தளையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த நிலையில் மகனை புதிய க?னவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார்.
வெளிநாடு சென்ற தாய்
குறித்த பெண்னுக்கு முதல் திருமணத்தில் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் தனது மூன்று பிள்ளைகளில், பெண் பிள்ளை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு மகன் முன்னாள் கணவரின் பொறுப்பில் உள்ள நிலையில் தனது புதிய கணவரிடம் 11 வயது மகனை கொடுத்து விட்டு குவைத் சென்றுள்ளார்.
தாயின் புதிய கணவர் வளர்ப்பு மகனை கர்பலாவிலுள்ள வாடகை வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் சிறையதந்தையின் தாக்குதலில் சிறுவன் மயக்க மடைந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த (6) திங்கட்கிழமை மாலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிறுவன் விபத்தில் விழுந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் போலியான முகவரியொன்றையும் கொடுத்துள்ளார்.
சிறுவனை மேலதிக சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் உயிரிழப்பு
சிறுவனின் உடம்பில் தாக்கப்பட்ட பலத்த காயங்கள் காணப்பட்டதையடுத்து சந்தேக முற்ற வைத்தியசாலை வைத்தியர் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்த சிறுவர் பிரிவு அதிகாரிகள் சிறுவனின் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதியதுடன் வைத்தியசாலை பொலிஸாருக்கும் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வளர்ப்பு தந்தை செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை தாக்கியதாக வளர்ப்பு தந்தையிடம் மேற் விசாரணைகளில் இருந்து சிறுவனை தாக்கியதை அவர் ஒப்புக் கொண்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசார்ணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை உயிர்ழந்த சிறுவன் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 126 புள்ளிகளை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.