வவுனியா விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி
வவுனியாவில் இன்று (21) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்து வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்றது.
சாரதிகள் இருவரும் படுகாயம்
வவுனியா நகரப் பகுதியில் புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கரண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்த வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.