யானை தந்தங்களை வைத்திருந்தவருக்கு நேர்ந்த கதி
அநுராதபுரத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயை எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹட்டகஸ்திகிலிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அநுராதபுரத்தில் ஹல்மில்லேவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பில் சந்தேக நபரான ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஞாயிற்றுக்கிழமை (14) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் ஆவார். கைதான சிப்பாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.