கோதுமை மாவால் அரிசிக்கு நேர்ந்த நிலை!
நாட்டில் நிலவும் கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் கோதுமை மா நுகர்வு கணிசமான பங்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அரிசித் தேவைக்கு அந்தப் பங்கு ஈடு செய்யப்படுமாக இருந்தால், அரிசி தேவையைப் பூர்த்தி செய்வது சவாலாக இருக்கும் எனவும் சந்தை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது அரிசி விநியோகம் கட்டுப்பாடின்றி நடைபெற்று வரும் நிலையில், மாவுத் தட்டுப்பாடு மோசமடைந்து அரிசிக்கும் இதே தேவை ஏற்பட்டால், சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்போது சிறுபோக அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் சந்தையில் அரிசி விலை சற்று குறைந்துள்ள நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மீண்டும் விலையும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.