யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழர்ந்துள்ளார்.
கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரே மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த போது இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மூதாட்டி கடந்த 17ஆம் திகதி தபால் நிலையத்தில் முதியோருக்கான கொடுப்பனவை எடுத்துவிட்டு வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.
இதன்போது வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணொருவர் அவரை ஏற்றிக்கொண்டு வந்தார். இதன்போது திடீரென அந்த மூதாட்டி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
பின்னர் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.