வைரலாகும் பிரபல அமைச்சரின் புகைப்படங்கள் !
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது சொந்த ஊருக்கு திடீரென பயணமாகியுள்ளார்.
அங்கு அவர் காட்டுக்குள் தனது நண்பர்களுடன் இளநீரும் அருந்தியதுடன், நாட்டின் சாதாரண குடிமகன்போல அங்குள்ள சிறுவர்களுடனும் அவர் அழவளாவி மகிழ்ந்துள்ளார்.
அந்த மகிழ்வான தருணங்கள் குறித்த புகைப்படங்களையும் டலஸ் அழகப்பெரும பதிவிட்டுள்ளார் இந்த விஜயம் குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
பல தசாப்தங்களுக்குப் பிறகு, எனது அன்புக்குரிய ஊரான ராடம்பொல கிராமத்தின் சூழலையும் அழகையும் மீண்டும் அதே வழியில் அனுபவித்தேன்.
மதியம் அன்னைக்கு ரகசியமாக நீராட வந்த ஏபகண்டா நதி, மோக்ஷத்தி அண்ணன், நிஹால் இன்னும் சிலரோடு சேர்ந்து பனகோஸ் சேனாவின் குட்டித் தம்பியின் குளத்தில் நாங்கள் உண்ட சாப்பாடு, அந்த அற்புதமான வரலாற்றிற்கு என்னை அழைத்துச் சென்றது.
இது எவ்வளவு உன்னதமானது..? என டலஸ் அழகப்பெரும தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நாட்டின் சாதாரண குடிமகன்போல அமைச்சர் டலஸ் அழகப்பெரும நடந்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.






