காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்!
காலி முகத்திடலில் போராட்டம் சட்டம் மற்றும் அமைதியை சீர்குலைத்தே மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனாவின் கொலன்னாவை தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, காலி முகத்திடலில் போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டம் மற்றும் அமைதியை சீர்குலைத்தே காலி முகத்திடலில் அதனை செய்தனர். சட்டத்தையும் ஒழுங்கையும் மீறியவர்களிடமிருந்து சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க கோட்டாபய ராஜபக்சவால் (Gotabaya Rajapaksa) முடியாமல் போனது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பதவியேற்று தற்பொழுது எவ்வாறு இந்த நிலைமையை ஏற்படுத்தினார். அவர் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்தார்.
இந்நிலையில், நாட்டை முன்னேற்றுவதற்கு நாட்டில் சட்டமும் அமைதியும் இருக்கவேண்டும். அதனை பாதுகாத்தால் நாட்டை முன்னேற்ற முடியும் என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.