பொலிஸ் பஸ்ஸின் டீசலை ஆட்டையைப்போட்ட சாரதி!
பொலிஸ் பஸ் ஒன்றின் சாரதி ஒருவர், 11 லீற்றர் டீசலை பஸ்ஸிலிருந்து எடுத்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ பணிகளுக்காக பொலிஸ் குழுவொன்றை கொழும்பு பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, அதன் சாரதியான கான்ஸ்டபிள் மொரகல்ல சுற்றுலா பொலிஸ் நிலையத்துக்கு சற்று தொலைவில் உள்ள தனியார் இடத்தில் பஸ்ஸை நிறுத்தி, டீசலை எடுத்து விற்பனை செய்ததாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஹபராதுவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 32 வயதுடையவர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்க சொத்துக்களை அபகரித்த குற்றச்சாட்டின் கீழ் கைதான சந்தேகத்துக்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.