கோட்டாபாயவிற்கு பேரிடியான மற்றுமொருவரின் முடிவு
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, ஜனாதிபதியினால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலேயே ஜயந்த சமரவீரவும் பதவி விலகியுள்ளார் இந்தநிலையில் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசாங்கத்தை குறிப்பாக அமைச்சர் பசில் ராஜபக்சவை விமர்சித்த குற்றச்சாட்டுக்காகவே விமல் வீரவன்ச பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ,
இந்தநிலையில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர்கள் பதவி நீக்கப்படுதல் மற்றும் பதவி விலகல் காரணமாக, அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் தொடர்ந்தும் குறைவு ஏற்பட்டு வருகிறது
இது அரசாங்கத்தின் புதிய நாடாளுமன்ற யோசனைகளுக்கு பாதமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.