காலி கராப்பிட்டி மருத்துவமனையில் உயிரிழந்தவர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்படவில்லை- மருத்துவர்
காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த நபர் கரும்பூஞ்சையினால் பாதிக்கப்படவில்லை என மருத்துவமனை இயக்குநர் செல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
26 ம் திகதி இந்த மரணம் இடம்பெற்றது இதனை தெரிவித்து நுரையீரல் திசுக்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திற்கு அனுப்ப்பபட்டன இதன் போது வழமைக்கு மாறான சில விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
21 ம் திகதி வெளியான இந்த அறிக்கையில் உயிரிழந்தவரின் நுரையீரலில் கறும் பூஞ்சை பாதிப்புகள் தென்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரேத பரிசோதனையின் போது அவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செல்டன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.