மகனைத்தேடிய மற்றுமொரு தாய் மரணம்; தமிழர் பகுதியில் தொடரும் துயரம்!
son
mother
vavuniya
By Krishna
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார்.வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61என்ற தாயே நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் தருமகுலநாதன் வயது 39 கடந்த 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
அவரைத்தேடி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US