நாள் நெருங்கிவிட்டது ... தயாராக இருங்கள்; ஈரான் எச்சரிக்கையால் பீதி!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் உகல நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பாலஸ்தீனியர்களே தயாராக இருங்கள் நாள் நெருங்கிவிட்டது
அதில் "இஸ்ரேலில் வசிப்பவர்களே, அங்கிருந்து வெளியேறுங்கள்" என்ற நேரடியான செய்தி இஸ்ரேலிய மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை இரான், பாலஸ்தீனியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு செய்தியில், "அன்பிற்குரிய பாலஸ்தீனியர்களே, தயாராக இருங்கள்; அந்த பெரிய நாள் நெருங்கிவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இஸ்ரேல் மீது ஈரான் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதை கோடிட்டு காட்டுகிறது. அமெரிக்காவின் தலையீட்டையும் மீறி, தற்காப்பு மற்றும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈரான் பின்வாங்காது என்பதை இந்த பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர் மேகங்கள், உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக மாறுமா என்ற அச்சமும் சர்வதேசத்தில் எழுந்துள்மை குறிப்பிடத்தக்கது.