இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் ஆபத்தான நிலையில்!
மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் பேரூந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் படுகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள2தாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று பகல் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பேரூந்துடன் சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
