லசந்த விக்ரமசேகரவின் கொலை சம்பவம் ; துப்பாக்கிதாரியின் வாக்குமூலத்தால் வெளியான திடுக்கிடும் தகவல்
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட உடனே காவல்துறைக்கு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதன்படி குறித்த காணொளியில், குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்த டுபாயிலிருந்து உத்தரவு கிடைத்ததாக சந்தேகநபர் கூறுகிறார்.

வெளிநாட்டிலுள்ள ஒரு தனிநபரிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில், தான் செயற்பட்டதாக அவர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
குறித்த சந்தேகநபர் மஹரகம, நாவின்ன பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவத்திற்கான முழுமையான நோக்கத்தைக் கண்டறியவும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக நபர்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.