சீன உர விவகாரம்; தீர்வு காண விவசாய அமைச்சு தீர்மானம்
இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதுகாக்கும் வகையில், சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2022ம் ஆண்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த பக்டீரியா உர பிரச்சினை தொடர்பான விவகாரத்தை கலந்துரையாடல் மூலம் தீர்ப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த உரக்கப்பல் திருப்பி அனுப்பப்பட்டமையினால், அந்த நிறுவனத்தின் நாமத்திற்கு ஏற்பட்ட அவபெயர் காரணமாக, 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை இழப்பீடாக செலுத்த வேண்டியிருந்தது.
இந்தநிலையில், எதிர்வரும் (19.02.2024)ஆம் திகதி முதல் (22.02.2024) ஆம் திகதி வரையில், நாட்டில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலைய சம்மேளனம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, பங்கேற்கவுள்ள சீன விவசாய அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.