பாகிஸ்தான் போதைப் பொருளுடன் சிக்கிய தமிழர் பகுதி இளைஞன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த நிலையில் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வீதிச்சோதனையில் நேற்று (31) மாலை ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது 29 வயதுடைய மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 84 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன குறித்த நபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்