தமிழர் பகுதியின் வசீகரம்.... கம்பீரமாய் மிளிரும் Reecha Organic Farm!
இயற்கை எழிழ்கொஞ்சும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடைப்பட்ட இயக்கச்சி தமிழர்பகுதியில் கம்பீரமாய் தோற்றம் பெற்றுள்ள Reecha Organic Farm தாயக்கத்திற்கு செல்லக்கூடாது என பிடிவாதமாக இருந்தவர்களையும் கரைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
ஈழத்தமிழ் மக்களின் இருப்புநிலை என்பது எமது வரலாற்றையும் , அதனூடான எமது விழுமியங்களிலுமே தங்கியுள்ளது. அந்த வகையில் எம் முன்னோர்களின் நினைவுகளை மீட்டெடுப்பதாக Reecha Organic Farm அமைத்துள்ளது என கூறினால் அது மிகயாகாது.
ஒருதடவை வந்துதான் பாருங்களேன்
உணவா, சுற்றுலாவா , ஓய்வெடுக்க வேண்டுமா, இயற்கையை ரசிக்க வேண்டுமா, எது வேண்டுமானாலும் Reecha Organic Farm உங்கள் ஆசைகளையும் எண்ணங்களையும் நிச்சயம் பூர்த்தி செய்யும்.
கண்ணுக்கு குளிச்சிதரும் பசுமையான இடங்களும் பலவகை தாவரங்களும் இயற்கையோடு இணைந்த கண்னை கவரும் அழகு காட்சிகளுக்கும் Reecha Organic Farm இல் பஞ்சமில்லை.
ஆக புலம்பெயர் தேசத்தில் வளரும் எம் சந்ததிகளும் எமது வரலாறுகளை அறிந்துகொள்வதுடன், எமது மண்வாசத்தையும் எதிர்கால சந்ததிக்கு கடத்திச்செல்லும் ஓர் அருங்காட்சியமாக வருங்காலத்தில் Reecha Organic Farm இடம்பெறும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
அதுமட்டுமல்லாது வேலைதேடும் எமது இளையோர்களிற்கும் வேலைவாய்ப்பு வழங்குவதுடன், அவர்களுக்குள் ஒளிந்துள்ள திறமைகளையும் வெளி உலகிற்கு கொண்டுவரும் சிறந்த தளமாக Reecha Organic Farm உள்ளது.
ஒருதடவை வந்து சென்றீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் உங்களை அழைக்கும் Reecha Organic Farm இன் வசீகரம்.... வந்துதான் பாருங்களேன்....