இலங்கையில் அரங்கேறும் மர்ம கொலைகளால் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் அரங்கேறும் மர்ம கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரத் தயக்கம் காட்டும் நிலை ஏற்படும் என்பதோடு, இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரபல வர்த்தகரும், ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளருமான தினேஷ் ஷாப்ட்டர் கடத்தப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் பெரள்ளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாட்டில் இவ்வாறு அரங்கேறும் மர்ம கொலைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வாறான பாதிப்பை எதிர்நோக்கும் என்று தொடர்ந்தும் விபரித்த பேராசிரியர், இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு வர்த்தகர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
அத்துடன் இதுபோன்ற மேலும் சில சம்பவங்கள் நாட்டின் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், நாட்டில் சமூக பாதுகாப்பற்ற, முதலீடுகளுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
தற்போது நாட்டிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்திருக்கும் மற்றும் முதலீடுகளை எதிர்ப்பார்த்திருக்கும் இந்த வேளையில் இவ்வாறான சம்பவங்கள நாட்டின் பொருளாதாரத்தில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.