தகாத உறவால் தாயின் கண்முன்னே மகளுக்கு அரங்கேறிய கொடூரம்
தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் தாயின் கை, கால்களை கட்டி அவரை சமையல் அறையில் தள்ளவிட்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.