வங்கிகளை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்கள்! ஏன் தெரியுமா?
பிரித்தானியர்கள் தங்கள் காலாவதியான நாணயத்தாள்களை மாற்றுவதற்காக வங்கிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இதனால் வங்கிகளில் நீண்ட வரிசைகள் ஏற்படும் என பிரித்தானிய மத்திய வங்கியான Bank of England கூறியுள்ளது.
விரைவில் முடிவுக்கு வரவுள்ள நாணத்தாள்கள்
பிரித்தானிய முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பழைய நாணயதாள்களை புதிய பிளாஸ்டிக் நாணயங்களாக மாற்ற ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது பாவனையில் உள்ள 20 பவுண்ட் மற்றும் 50 பவுண்ட் நாணத்தாள்களை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதாக இங்கிலாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
30ம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது
அத்துடன் செப்டம்பர் 30ம் திகதிக்கு பின்னர் அந்த நாணயத்தாள்கள் செல்லுபடியாகாது எனவும் இங்கிலாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் தங்கள் பணத்தை மாற்ற வங்கிகள் நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
இங்கிலாந்து மத்திய வங்கி தனது பணத்தை நவீனமயமாக்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் காலக்கெடு வழங்கிய நிலையில் இறுதி நாட்கள் நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் உடனடியாக பணம் தேவைப்படாவிட்டால், நாணயத்தாள்களை தபால் மூலம் அனுப்புமாறு இங்கிலாந்து வங்கி அறிவுறுத்தியுள்ளது.