பொலிஸ் நிலையம் சென்ற சடலத்தால் பொலிஸார் அதிர்ச்சி!
வீதி ஒழுங்குகளைமீறிச் சென்றஅமரர் ஊர்தியை தடுத்து நிறுத்திய பொலிஸார், வாகனத்தை பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றபோது அதில் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பொரளை பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாகனத்தை மறித்த போக்குவரத்து பொலிஸார்
பொரளை பொலிஸ் அதிகாரிகள் பொரளை டி.எஸ். சேனநாயக்க சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, கவனக்குறைவாக செலுத்தியதற்காக இறுதி ஊர்வல வாகனம் ஒன்றை நிறுத்தினர்.
அதன்போது சாரதி மதுபோதையில் இருந்ததை அறிந்த பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், காரை விட்டு இறங்கிய சாரதி, பின்னால் சடலம் இருப்பதாக பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதனால் கவலையடைந்த பொலிஸார், மலர்ச்சாலைக்கு போன் செய்து, மற்றொரு இறுதி ஊர்வல வாகனத்தை வரவழைத்து சடலத்தை உரிய இடத்திற்கு அனுப்பிவைத்தனர்.
அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சாரதிக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த சடலம் கொழும்பில் உள்ள பிரபல மலர்ச்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்றும் கு வாகனத்தை அதன் மேலாளர் ஓட்டிச் சென்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.