வாழும்போது பலரை ஆட்டிப்படைத்த கனேமுல்ல சஞ்சீவ ; அநாதரவாக அடக்கம்
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக் குற்றவாளி கனேமுல்ல சஞ்சீவ, உடல் பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி மற்றும் சக நண்பர்கள் உடலை அடக்கம் செய்திருந்தனர்.
அநாதரவாக அடக்கம்
கடந்த 19 ஆம் திகதி , கொழும்பு -புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கனேமுல்ல சஞ்சீவ சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர இதுவரை யாரும் முன்வரவில்லை என வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனேமுல்ல சஞ்சீவ, சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலானபோது சடலத்தை யாரும் பொறுபேற்க முனவரவில்லை என நேற்றைதினம்(20) பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அவரது சகோதரி சடலத்தை பொறுப்பேற்க முன்வந்ததாக கூறப்பட்டிருந்த்து .
கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.