கிறிஸ்துமஸ் தினத்தில் இயற்கையின் அழகு; கண்ணை கவரும் நுவரெலியா!
நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பார்க்கும் இடமெங்கும் இயற்கையின் மிக அழகாகன காட்சி கண்ணைகவரும் விதமாக அமைந்திருந்தது.
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில் நுவரெலியாவில் பூக்கள் பூத்துக் குலுங்குவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். அதோடு , நுவரெலியா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இவ்வாறான நிலைமையே காணப்படும்.
இந்நிலையில் நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதாகவும், வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை நுவரெலியாவில் பெய்யும் பனிப்பொழிவு காரணமாக மரக்கறிச் செய்கை மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


