இலங்கையை தெறிக்கவிட்ட அவுஸ்திரேலிய அணி!
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து, முதலாவது நாளில் தமது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி, மூன்றாம் நாளான இன்று 321 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில், 2 ஆம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பின்னர், வெற்றி பெறுவதற்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
அப்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டேவிட் வோர்னர், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்களாக 10 ஓட்டங்களை குவித்தார்.
அதற்கமைய அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.