மகிழ்ச்சியை ஏற்படுத்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளின் தொகை இந்த ஆண்டு 14.72 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 6,984,960 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 1,91,982 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 32,879 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து 25,869 பேரும், பிரித்தானியாவில் இருந்து 17,453 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.