வவுனியாவில் மதுபோதையால் இளைஞன் செய்த செயல்
வவுனியா, ஓமந்தை வேலர்சின்னக்குளம் பகுதியில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்குள்ள குளக்கரையில் வைத்து 52 வயதானவரை இடியன் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 10.30 மணி மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய 28 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய தகராறினால் ஏற்பட்ட கோபத்தில் மதுபோதையில் நியதானமிழந்து துப்பாக்கியால் சுட்டு விட்டதாகவும் தான் தவறு செய்து விட்டேன் என்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன் பொலிசாரிடம் தெரிவித்தார்.
கைதானவரை வவுனியா நீதிமன்றத்தில் நிறுத்தியதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.