ரஷ்யாவின் திடீர் மாற்றம்; உக்ரைன் அதிகாரி மற்றும் பத்திரிகையாளர் விடுவிப்பு!
பல நாட்களாக சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் அதிகாரி மற்றும் ஒரு பத்திரிகையாளரை ரஷ்ய படைகள் விடுவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமி பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் அதிகாரியான Serhiy Kirichko, ஒரு வாரம் அடித்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், செவ்வாயன்று விடுவிக்கப்பட்டதாக, உள்ளூர் அரசியல்வாதியை மேற்கோள் காட்டி Ukrinform செய்தி நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.
அத்துடன் உக்ரைனின் ஹ்ரோமாட்ஸ்கே சேனலின் பத்திரிகையாளரான விக்டோரியா ரோஷ்சினா, ஒன்பது நாட்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் திங்களன்று விடுவிக்கப்பட்டதாக தொலைக்காட்சி நிலையம் அறிவித்தது.
உக்ரைனை தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போரை தொடுத்துள்ள ரஷ்யா, அண்மௌய நாட்ட்களாக மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகின்றது.
குறிப்பாக, ரஷ்ய இராணுவத்தின் வீரம் குறைந்துவிட்டதாகவும், இலக்கு தவறவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவரும் நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட உக்ரைனியர்களின் விடுவிப்பு இதை உண்மையாக்குவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.