சீரற்ற காலநிலை ; சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்து அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து அமலில் இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை
இதற்கமைய, இன்று (22) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 10 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவுஃபர் மௌலவி; 15 பேர் குற்றவாளி 9 பேர் விடுதலை; நீதிமன்றம் அறிவிப்பு!
குறிப்பாக, கண்டி மாவட்டத்தில் பஸ்பாககொறளை,
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், கொத்மலை, கொத்மலை மேல், அம்பகமுவ பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, காலி மாவட்டத்தில் நாகொட, நெலுவ
களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட
கண்டி மாவட்டத்தில் கங்க இஹல கோரளை, உடபலாத்த
கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லா, தெரினியகல, அரநாயக்க, யட்டியாந்தொட்டை மற்றும் தெஹியோவிட்ட,
நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.