2022 வரவு செலவுத் திட்டம் மக்களை ஏமாற்றியுள்ளது; சாடும் ஐ.தே.க!
சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நியாயப்படுத்த மாத்திரமே பயன்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்றையதினம் நாடாளுமன்றில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அக்கட்சியின் துணைத் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகவும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.